என்ன ஆனார் 7 வயது சிறுமி... செஞ்சியில் தி.மு.க. போராட்டம்!

DMK protest
தி.மு.க.வினர் போராட்டம்
Published on: 

செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை 10 நாள்கள் கடந்தும் கண்டுபிடிக்காத நிலையில், இதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஒருவர் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வீட்டில் இருந்தபோது இரவு காணாமல் போயுள்ளார். அந்த சிறுமியைக் கண்டுபிடிக்க கடந்த 10 நாள்களாக ஒரு துப்புகூட கிடைக்கவில்லை என்பதால், த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டமானது ஆரணி எம்.பி.தரணிவேந்தன், முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்தவொரு சட்டமும் சரியாக இல்லை என்றும் காணாமல்போன குழந்தையை கண்டுபிடிக்காமல் த.வெ.க. அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சாலையில் அமர்ந்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். 

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப்பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது." என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com