தி.மு.க.விலும் பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு!

anna arivalayam glittering with Iluminating lights
அண்ணா அறிவாலயம்
Published on

பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழுவை தி.மு.க. இன்று அறிவித்தது.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

”தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்த தி.மு.க. அமைத்திட்ட குழுவில் டி.ஆர்.பாலு (தலைமை) கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தரப்பில் குழு அமைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கூட்டணித் தலைமைக் கட்சியான தி.மு.க.வில் பேச்சுக் குழு அமைக்கப்படவில்லை என்பதை ஒரு குறையாக காங்கிரஸ் நிர்வாகிகள் பகிரங்கமாகக் கூறிவந்தனர். இந்த விவகாரம் உச்சத்துக்குப் போனதை அடுத்து, சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்ததும், 22ஆம் தேதிவாக்கில் பேச்சுவார்த்தைக் குழு வேலைகள் தொடங்கும் என தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com