பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் குமரி தியானம்: எதிர்த்து தி.மு.க. மனு!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் நாளை மாலை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய உள்ளதாக பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தி.மு.க. மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், அம்மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இதை நம்பியே இங்குள்ள வியாரிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கடைகளை மூடச் சொல்வார்கள்.

பிரதமரின் இந்த வருகை மாவட்ட நிர்வாகத்துக்கும் மாநில அரசுக்கும் அதிகப்படியான செலவீனத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பிரதமரின் இந்த வருகையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com