பிப்.22 முதல் தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை!

பிப்.22 முதல் தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை!
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியின் சார்பில் தொகுதி பங்கீட்டுப் பேச்சு வார்த்தை இழுபறியாக நீடிப்பதாக காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. ஆனால் திமுக தரப்பிலோ உரிய நேரத்தில் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் இதைப்பற்றி அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் புதுடில்லியில் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திமுக தரப்பு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திமுக தலைமைக் கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் அக்கூட்டம் முடிந்தபின்னர் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக கூட்டணியில் தொகுதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com