தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

வாக்கு எண்ணும்போது என்ன செய்ய..?- தி.மு.க. மா.செ., முகவர்கள் ஜூன்1இல் இணையவழிக் கூட்டம்!

அடுத்த மாதம் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க.வின் மாவட்டச்செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கூட்டத்தை அக்கட்சியின் தலைமை கூட்டியுள்ளது. 

அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், ஜூன் முதல் நாளன்று முற்பகல் 11 மணியளவில் காணொலிமூலம் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

அப்போது, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com