விஜய் சொன்ன ’கட்சி நிதி’... வெளிநடப்பு செய்த உதயநிதி!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்
Published on

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்து பேசினார். 

அப்போது, அவர், கடந்த ஆட்சிக் காலங்களில் கட்சி நிதி எனும் பெயரில்  கொள்ளையடித்தார்கள் எனப் பேசினார்.

அவர் கட்சி நிதி எனக் குறிப்பிட்டதுமே முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் உறுப்பினர்கள் பலரும் எழுந்து நின்று சத்தம்போட்டார்கள். 

உட்கார்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சிறிது நேரம் கழித்து எழுந்துநின்றார். 

தொடர்ந்து முதலமைச்சரைப் பேசுமாறு அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியும், அவர்கள் சத்தமிட்டபடி நின்றனர். 

அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் மூன்று முறை கேட்டுக்கொண்டும் அவர்கள் தங்களின் செய்கையை நிறுத்தவில்லை. 

பேரவைத்தலைவர் ஒரு கட்டத்தில் எழுந்துநின்று அமைதிப்படுத்த முயன்றார். 

முதலமைச்சர் பேசியபிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசலாம் என அவர் கூறியும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை. 

பின்னர் உதயநிதியைப் பேச அனுமதிக்கவும், அவர் முதலமைச்சர் ஆதாரம் இல்லாமல் பேசுவதாகவும் கட்சி என்றால் எந்தக் கட்சி எனச் சொல்லவேண்டும் என்றும் கூறினார். 

அப்படி சொல்லிவிட்டு முதலமைச்சர் விஜய் பேச்சைத் தொடர்ந்ததும், திடீரென அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

பின்னர், வெளியே வந்த உதயநிதி, ஆதாரம் இல்லாமல் முதலமைச்சர் பேசுவதாகவும் அதற்கு பதில்கூற அனுமதிக்கவில்லை என்றும் சொன்னார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com