விக்கிரவாண்டியில் தி.மு.க. வெற்றி- யாருக்கு எவ்வளவு வாக்குகள்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
Published on: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. 

அக்கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா 1 இலட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்றார். 

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சற்றுமுன்னர் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அவர், அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவதாக வந்த பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றார்.  

நா.த.க.வின் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com