ஜனவரி 21இல் தி.மு.க. இளைஞரணி மாநாடு என அறிவிப்பு!

ஜனவரி 21இல் தி.மு.க. இளைஞரணி மாநாடு என அறிவிப்பு!

Published on

மழை வெள்ளத்தால் தள்ளிவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமைக்கழகத்தின் பெயரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ மிக்ஜாம் புயல், தென்மாவட்டங்களில் பெய்த அதிக கன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட - தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, சேலத்தில் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி முதலில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்டது. அதற்கான தயாரிப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தன. அமைச்சரும் இளைஞரணியின் செயலாளருமான உதயநிதி பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று பெரும் கூட்டங்களை நடத்திவந்தார்.

சென்னை மழை வெள்ள பாதிப்பால் டிசம்பர் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து மழை பாதிப்பு தென்மாவட்டங்களுக்கும் தொடர்ந்ததால் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com