விஜய்யின் சொகுசு கார்கள், சொத்து விவரம்... தேர்தல் பத்திரத்தில் தகவல்!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.

வழக்கமாக வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரம் இணையத்தில் பதிவேற்றப்படும்.

அதன்படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் விஜய்யின் பிரமாண பத்திரம் பொதுவெளியில் கிடைத்துள்ளது.

விஜய் வருமான வரித் தாக்கல் விவரங்களின்படி அவரது ஆண்டு வருமானம்:

2024-2025: ரூ.184.53 கோடி

2023-2024: ரூ.105.69 கோடி

2022-2023: ரூ.198.71 கோடி

2021-2022: ரூ.237.46 கோடி

2020-2021: ரூ.8.04 கோடி

மொத்த அசையும் சொத்தின் மதிப்பு: ரூ.404 கோடி

அசையா சொத்துகள்: ரூ.115 கோடி

சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலை ரூ. 92,76,03,409

கையிருப்பில் இருக்கும் ரொக்கம்: ரூ.2,00,000

விஜய் பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருக்கிறது.

135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருக்கிறது

கொடைக்கானலில் 2 பங்களா உள்ளது.

நிறுவனங்கள் / பரஸ்பர நிதிகள் மற்றும் ஏனையவற்றில் உள்ள பத்திரங்கள், கடனீட்டுறுதிப் பத்திரங்கள்/ பங்குகள் ஆகியவற்றில் யூனிட்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் ஏனைய தொகைகள்

சுனில் ராஜ் — ரூ.1,50,00,000

N ஆனந்த் — ரூ.3,00,00,000

V ரவிசந்திரன் — ரூ.5,00,00,000

எல்பி ஆண்டானியஸ் பிரிட்டோ — ரூ.20,00,00,000

கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை — ரூ.20,00,00,000

கிரீன் லீப் இன்போடெக் — ரூ.2,34,00,000

ஜெயா நகர் பிராபர்டி பி லிட் — ரூ.94,00,000

சந்திரசேகர் — ரூ.3,02,71,931

சோபா சேகர் — ரூ.8,71,018

சங்கீதா விஜய் — ரூ.12,60,53,615

ஜேசன் சஞ்சய் — ரூ.8,78,479

திவ்யா சாசா — ரூ.4,60,000

விதியா சாரிடபுள் டிரஸ்ட் — ரூ.5,84,21,000

விஜய் வித்யாசிரம் — ரூ.24,96,000

விஜய் வைத்துள்ள கார்கள்

1. BMW 530 - ரூ.80,54,119

2. Toyoto Lexus350 - ரூ.3,01,57,881

3. Toyoto vellfire - ரூ.1,63,45,118

4. BMW I7 - ரூ.2,00,64,296

5. Maruti Swift - ரூ. 5,35,000/-

இரு சக்கர வாகனம்

TVS XL SUPER - ரூ.67,400/-

விஜய்யின் கல்வித் தகுதி

B.Sc இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992

தொழில்

சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், வித்யா சாரிடபுள் டிரஸ்ட்

குற்றவியல் வழக்குகள் : எதுவும் இல்லை

தனது பெயரில் கடன் எதுவும் இல்லை உள்ளிட்ட தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com