மருத்துவர்கள் போராட்டம்... மாநிலம் முழுவதும் சிகிச்சை பாதிப்பு!

doctors strike
போராடும் மருத்துவர்கள்
Published on: 

சென்னையில் நேற்று அரசு மருத்துவர்கள்தாக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

புற்றுநோய் மருத்துவர் தாக்கப்பட்ட கிண்டி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை முன்பாக காலை முதல் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். இரவீந்திரநாத் இதில் கலந்துகொண்டார். 

அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது. 

புறநோயாளிகள் சேவையை மருத்துவர்கள் புறக்கணித்ததால், வெளியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பச்சென்றனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com