மாநகரப் பேருந்து கதவு பொருத்தப்பட்டது
மாநகரப் பேருந்து கதவு பொருத்தப்பட்டது

சென்னையில் கதவு இல்லாத 468 பேருந்துகள் பட்டியல்!

சென்னையில் இயக்கப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கதவு இல்லாதவை கண்டறியப்பட்டு கதவு பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

மாநகரப் பேருந்துகளில் 468 பேருந்துகளில்  கதவுகள் இல்லாததால் படியில் தொங்கியபடி பயணம்செய்பவர்கள் அடிக்கடி விழுந்து உயிரிழப்புவரை நிகழ்ந்துவருகிறது. இதைத் தடுப்பதற்காக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முதலில் கதவுகள் இல்லாத பேருந்துகள் கணக்கெடுக்கப்பட்டன. அப்படியுள்ள பேருந்துகள் மொத்தம் 468 என்று தெரியவந்ததாகவும் அதில் முதல் கட்டமாக 200 பேருந்துகளில் கதவு பொருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக, 268 பேருந்துகளில் இன்றுவரை 248 பேருந்துகளுக்கு கதவு பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் கணக்குப்படி, இன்னும் 20 பேருந்துகளுக்கு கதவுகள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. 

அனைத்து பேருந்துகளிலும் கதவுகளைப் பொருத்தவேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.  

logo
Andhimazhai
www.andhimazhai.com