வி.எஸ்.பாபுவின் மரணத்தில் சந்தேகம்?- போலீசில் புகார்

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு
Published on: 

சென்னையில் நேற்று மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட கொளத்தூர்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகப் பிரச்னை எழுந்துள்ளது. 

முன்னதாக, அவருடைய உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடக்கோரி அந்தத் தொகுதியின் தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அவரே இப்போது காவல்துறையில் சாவில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 

இணையவழியில் அவர் புகார் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வைக்குமாறு அவர் அப்புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.