அமித்ஷா கூட்டத்தில் டிரோன்... சுட்டு வீழ்த்திய வீரர்கள்!

மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷா
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற காரைக்கால் பொதுக்கூட்டத்தில் பறந்த டிரோன் கேமரா சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று காரைக்காலில் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, தடையை மீறி ஒரு டிரோன் கேமரா பறந்து வந்தது. இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) வீரர்கள் உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டிரோனை இயக்கியவர் திருநள்ளாறைச் சேர்ந்த லோகேஷ் என தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து காரைக்கால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com