
தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2025–26இல்ல் தமிழ்நாடு அரசின் நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission) மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு, மாசு கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து வளர்ச்சியும் பசுமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.