பொருளாதார நிபுணர் கலையரசனைக் கைதுசெய்த போலீஸ்... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா போலீஸ்கார்?

Economist  Kalaiarasan
கலையரசன் கைது
Published on: 

பிரபல பொருளாதார நிபுணர் கலையரசன், போலி இன்ஸ்டாகிராம் பெயரில் விசாரணை என போலீசார் தன்னைத் துன்புறுத்தியதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில், பொருளாதார நிபுணர் கலையரசனை போலீசார் கைது செய்தனர். அவரது பெயரில் இயங்கிய போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. குறித்து அவதூறான பதிவு தொடர்பாக விசாரணை நடத்தவே அதிகாலையில் அவரைக் கைது செய்ததாக போலீசார் கூறினர்.

ஆனால், எந்த ஒரு தொடர்பும் இல்லாத இந்த சம்பவத்தில், தனது குரலை ஒடுக்குவதற்காகவே இத்தகைய சட்டவிரோதச் செயல் அரங்கேற்றப்பட்டதாக கலையரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, டி.ஜி.பி.யிடம் அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

"எந்த ஒரு முறையான ஆவணமோ, எஃப்.ஐ.ஆர். நகல் போன்ற எதையுமே காட்டாமல் அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக போலீசார் என்னைக் கைது செய்தனர்.

போலீஸ் வாகனத்திற்குப் பதிலாக வாடகை காரில் வந்த போலீசார், எனது போனைப் பறிமுதல் செய்து என்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்தினர். உயர் அதிகாரிகளுடன் போனில் பேசிக்கொண்டே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இதுபோன்ற சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று புகார் மனுவில் கலையரசன் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com