அமைச்சர் பொன்முடியின் சொத்து முடக்கம்!

 பொன்முடி
பொன்முடி
Published on

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கௌதம சிகாமணியின் 14.21 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன.

விழ்ப்புரம், மாவட்டம், வானூர் வட்டம் பூந்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கதிகமான மண் அகழப்பட்டது. அதில் அரசுக்கு 28.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது. இதில் அமலாக்கத் துறையும் வழக்கு நடத்தி விசாரித்தது. அந்த வழக்கில் பொன்முடி கைதுசெய்யப்பட்டார். அமைச்சர் பதவியை இழந்து, பிணையில் வெளிவந்தபின்னர் அமைச்சர் பதவியில் தொடர்கிறார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், தந்தை, மகன் இருவரின் சொத்துகளை முடக்கிவைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com