தமிழ் நாடு
மூத்த அமைச்சர் இ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் தேடுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள அவரின் அரசு வீடு, சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள அறை, மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
ஏற்கெனவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும் பெரியசாமி மீது வழக்கு பதியப்பட்டது. முன்னரும் அமலாக்கத் துறை சோதனையிட்டு, அவரிடம் 9 மணி நேரம்வரை விசாரணையும் நடத்தியது.
பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.