திருமாவின் முடிவு என்ன ? சஸ்பென்ஸுக்கு எண்ட்கார்டு போட்ட எடப்பாடி !

திருமாவின் முடிவு என்ன ? சஸ்பென்ஸுக்கு எண்ட்கார்டு போட்ட எடப்பாடி !
Published on

சென்னை 100 அடி சாலையில் அமைந்துள்ள விசிக அலுவலகமான அம்பேத்கர் திடல் இன்று காலை முதலே தவெக தொண்டர்களால் ததும்பி வழிகிறது. விஜய்யும் திருமாவும் இணைந்து மதிய உணவு அருந்தியபடி கூட்டணியை அறிவிக்கப்போகிறார்கள் என்று ஊடகங்கள் கொளுத்திப்போட்டதால் கூடிய கூட்டம் அது.

ஒருவழியாக அச்செய்தியும் விசிக நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டு அகில இந்திய ஊடகங்கள் விசிக அலுவலகத்தில் காலையிலிருந்தே தேவுடு காத்து வருகின்றன.

காத்திருப்பவர்களுக்கு நடுவில் ‘கொறிக்க’ ஏதாவது ஒரு செய்தி கொடுக்க நினைத்தோ என்னவோ விலை உயர்ந்த ஷோபா ஒன்று வந்திறங்கியது.

மதிய உணவு வேளை எவ்வித தகவலுமின்றி கடந்துபோன நிலையில், விசிக நிர்வாகி சிந்தனைச் செல்வன், ‘விசிக தலைவர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்பதை மாலை 4 மணிக்கு அறிவிப்போம்’ என்று ஒரு சஸ்பென்ஸ் குண்டு போட்டிருக்கிறார். அதாகப்பட்டது மாலை 4 மணிக்கும் முடிவு அறிவிக்கப்படமாட்டாது.

இந்நிலையில், நடுவே லேசாக துளிர்த்த முதல்வர் ஆசை முற்றிலும் பட்டுப்போன நிலையில், … தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு எனது வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவின் பாணியிலேயே அக்கட்சியின் பெயரைக்கூட தன் வாயால் சொல்லமாட்டாராம்.

ஸோ எடப்பாடியின் அறிக்கையை வைத்து அறிந்துகொள்ளமுடிவது என்னவென்றால் மாலை 7 மணிக்கோ அதற்கு பின்னரோ கூட தனது முடிவை அறிவிக்கவிருக்கும் திருமா விஜயை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டார் என்பது.

நீலச்சாயம் வெளுத்துப்போச்சி டும் டும் டும்…

எடப்பாடி வேஷம் கலைஞ்சி போச்சி டும் டும் டும்

logo
Andhimazhai
www.andhimazhai.com