அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on: 

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டிருந்தார். 

இதனிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.க. வேட்பாளர்கள், தொகுதிப் பொறுப்பு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். 

அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று காலையில் சென்னை, புறநகர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com