போட்டோஷூட்தான் வடிகால் அமைப்புப் பணி... எடப்பாடி பழனிசாமி தாக்கு!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on: 

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், இதற்குக் காரணம் தி.மு.க. அரசு வடிகால் அமைப்பு எனும் பெயரில் போட்டோ ஷூட் நடத்தியதே என்று அ.தி.மு.க. குறைகூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் தமிழக வானிலை மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை எனக் கூறியுள்ள அவர், அ.தி.மு.க.வின் ஐடி அணி விரைவுச் செயல்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 

சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com