நீர் மோர்ப் பந்தலைத் திறந்த எடப்பாடி பழனிசாமி
நீர் மோர்ப் பந்தலைத் திறந்த எடப்பாடி பழனிசாமி

என்னா வெயில்... - நீர்மோர்ப் பந்தலைத் திறந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்திலேயே அதிகமான வெப்பம் தாக்கும் பகுதியாக ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் இருந்துவரும் நிலையில், ஆங்காங்கே நீர் மோர் பந்தலைத் திறந்துவைக்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் கட்சியினரைக் கேட்டுக்கொண்டார். 

அவரைத் தொடர்ந்து இளைஞர் நலன் துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுரீதியாகச் செய்யப்படும் சில நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருந்தார். 

இந்நிலையில், சேலம் சூரமங்கலம் பகுதியில் அ.தி.மு.க.வின் மாநகர் மாவட்ட அமைப்பின் சார்பில் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தார். அப்போது, மோர், பழங்களையும் அவர் அங்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com