எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வாய்ப்பிருந்தால் அயோத்திக்குச் செல்வேன்- எடப்பாடி பழனிசாமி

வாய்ப்பிருந்தால் அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்குச் செல்வேன் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் போட்டியிட விரும்புவோர் தலைமைக்கழகத்தில் முறைப்படி விண்ணப்பம் செய்தபின்னர், தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுத்து பெயர்கள் முடிவாகும் என்று அவர் கூறினார்.

அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பு பற்றிக் கேட்டதற்கு, “ அ.தி.மு.க.வில் யார் விரும்பினாலும் எந்த மதம், சதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இராமர் கோயில் கும்பாபிசேகத்தில் கலந்துகொள்ளலாம். வாய்ப்பிருந்தால் நானும் கலந்துகொள்வேன். எனக்கு கால் வலி இருப்பது...தெரியும்...!” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com