எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உன்மைதான். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.