அதிசி, ஆம் ஆத்மி கட்சி
அதிசி, ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மியின் பிரச்சாரப் பாட்டை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சாரப் பாடலை மாற்றியமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

மக்களவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் பிரச்சாரப் பாடலானது கேபிள் தொலைக்காட்சி வலைப்பின்னல் விதிகள், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகவும், எனவே அந்தப் பாடலை மாற்றியமைத்து சமர்ப்பிக்குமாறும் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; அதற்குப் பதிலாக அவருக்கு வாக்களிப்போம் என்கிறபடியாக அந்தப் பாடலில் வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கெஜ்ரிவால் இருப்பதைப் போன்ற காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட வாசகம்தான் இப்போது ஆணையத்தின் எதிர்ப்புக்கு உரியதாகியுள்ளது.

விளம்பரப் பிரச்சாரத்தின்போது இந்த வாசகம் பல முறை இடம்பெறுவதாகவும், தேர்தல் விதிகள், கேபிள் தொலைக்காட்சி வலைப்பின்னல் விதிகளின்படியான நிகழ்ச்சி- விளம்பர நெறிமுறை விதி 6-ல் இல் ஜிக்கு எதிராகவும் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அதிசி தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com