இராமதாசுக்கு பா.ம.க. இல்லை- தேர்தல் ஆணையம்

election comission of india
தேர்தல் ஆணையம்
Published on

பா.ம.க. யாருக்கு எனும் பிரச்னையில் ஒருவழியாக இப்போதைக்கு அன்புமணி தரப்புக்குதான் கட்சி சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

புதுதில்லி உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் ஜி.கே.மணி தாக்கல்செய்த வழக்கில், அன்புமணி பா.ம.க.வுக்கு உரிமைகோருவதைத் தடைசெய்யக் கோரப்பட்டிருந்தது. இதில், தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று ஆணையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட பா.ம.க. ஆவணங்களின்படி அதாவது கட்சிப் பிரச்னைக்கு முன்னைய நிலையில் இருந்தபடி, ஆய்வுசெய்ததில் அன்புமணி தரப்புக்கே கட்சி உரிமை ஆகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

அதை ஏற்றுக்கொண்ட தில்லி உயர்நீதிமன்றம் ஆணையத்தின் வாதத்தின்படி வழக்கை முடித்துவைப்பதாக அறிவித்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com