Live updates: மக்கள் தீர்ப்பு 2026: தவெக- 108, திமுக+ - 74, அதிமுக+ - 52

Live updates: மக்கள் தீர்ப்பு 2026: தவெக- 108, திமுக+ - 74, அதிமுக+ - 52

முதல் தேர்தலிலேயே 1.5 கோடி வாக்குகள் பெற்று த.வெ.க. சாதனை. 

திருச்சி கிழக்கு தொகுதியிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி.

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தோல்வி; த.வெ.க. முஸ்தபா வெற்றி.  

ஒரத்தநாடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் தி.மு.க.வின் வைத்திலிங்கம் வெற்றி.  

விஜய் சென்னை, பெரம்பூரில் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெற்றி. 

உதயநிதி ஸ்டாலின் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 

கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி. 

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோவை வால்பாறை ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வெற்றி.  

பா.ஜ.க. போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.

எடப்பாடி பழனிசாமி 69,549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 

மார்க்சிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதியில் த.வெ.க. சுப்பிரமணியன் வெற்றி. 

குன்னம்: திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் 14893 வாக்குகள் முன்னிலை #16வது சுற்று முடிவில்

சென்னை மாநகரில் உள்ள தொகுதிகள் எப்போதும் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும். அதிமுக வென்ற காலங்களில்கூட சென்னை திமுகவை கைவிட்டது இல்லை. ஆனால் விஜய் அலை திமுகவை அதன் கோட்டையிலேயே அடித்துப் பறக்கடித்துவிட்டது. மதியம் மூன்று மணி நிலவரப்படி முதல்வர் ஸ்டாலின் உள்பட 14 வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வினர். சேப்பாக்கத்தில் உதயநிதி, துறைமுகத்தில் சேகர்பாபு ஆகியோர் மட்டும் இழுபறியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மயிலாப்பூரில் த.வெ.க.வின் வெங்கட்ரமணன் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.  

தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவனைத் தோற்கடித்து த.வெ.க. முதல் வெற்றியைப் படைத்தது.  

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இராமச்சந்திரன் வெற்றி.  

கே.வி.குப்பம் தொகுதியில் த.வெ.க.வின் தென்றல் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 

சிவகாசி தொகுதியில் த.வெ.க. கீர்த்தனா வெற்றி. 

தருமபுரி : சௌமியா அன்புமணி 12ஆயிரம் வாக்குகளில் முன்னிலை. 

கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும் செங்கோட்டையன் வெற்றி.  

சென்னையில் த.வெ.க.வுக்கு முதல் வெற்றி. அண்ணாநகர் தொகுதியில் இராம்குமார் வென்றுள்ளார்.  

திண்டிவனம்: விசிகவின் வன்னி அரசு 1560 வாக்குகள் முன்னிலை- சுற்று எண் 12

தி.மு.க.வின் முதல் வெற்றி. திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேரு 4,749 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

துணைமுதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, இ.பெரியசாமி, பெரியகருப்பன், இராஜ கண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, கோவி செழியன், மெய்யநாதன் ஆகியோரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பின்னிலை. 

முதல் முடிவு அறிவிப்பு: மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 60,080 வாக்குகள் பெற்று வெற்றி. த.வெ.க. வேட்பாளர் மதுரைவீரன் - 57,361 வாக்குகள்.  

அசாம் முன்னிலை நிலவரம் : பா.ஜ.க. கூட்டணி-98, காங்கிரஸ் அணி- 26, மற்றவை- 2. 

கேரளம் முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் கூட்டணி- 95, இடது கூட்டணி-42,  பா.ஜ.க.-1. 

மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: பா.ஜ.க.- 160, திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி- 121, இடதுசாரி கூட்டணி- 1, காங்கிரஸ்- 0. 

தேர்தல் ஆணையத் தகவல் : த.வெ.க.- 108, அ.தி.மு.க.- 63, தி.மு.க.- 41, பா.ம.க.-6, காங்கிரஸ்- 5, பா.ஜ.க.- 3, சி.பி.ஐ.- 2, முசுலிம் லீக், வி.சி.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., சி.பி.எம்.-1.  

திருப்போரூர்- 5 வது சுற்று முடிவில் தவெக 11000 வாக்குகள் முன்னிலை!

ஏழாவது சுற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் (23,971 வாக்குகள்) பின்னிலை. த.வெ.க. பாபு 29,425 வாக்குகள். 

பா.ம.க. 5 தொகுதிகளில் முன்னிலை. 

சென்னையை அடுத்த பனையூரில் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள். விசில் அடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை. 

மார்க்சிஸ்ட் கட்சி பத்மநாபபுரம், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை.  

தமிழ்நாட்டில் பா.ஜ.க. போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னிலை. பெரும்பாலான இடங்களில் மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளது. 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்றார். மங்களம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 

கொளத்தூர் தொகுதியில் 4ஆம் சுற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் 14,141 வாக்குகள் பெற்று பின்னடைவு. த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு- 16,692 வாக்குகள். 

காலை 10.13 மணி நிலவரப்படி, த.வெ.க. 100 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க.- 80, தி.மு.க.- 53, நா.த.க.-0.

முதல் சுற்றில், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு. 

முன்னிலை நிலவரம்: த.வெ.க. -89, அ.தி.மு.க.-63, தி.மு.க.- 52, நா.த.க.- 0.  

முன்னிலை நிலவரம்: த.வெ.க. -71, தி.மு.க.-54, அ.தி.மு.க.- 50, நா.த.க.- 0.  

திருவள்ளூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தி.மு.க. முகவர் பாஸ்கருக்கு மாரடைப்பு, மரணம். 

முன்னிலை நிலவரம்: திமுக 57; அதிமுக 27, தவெக 20; நாதக 0

logo
Andhimazhai
www.andhimazhai.com