கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

கனிமவளத் துறை அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு... இதுதான் காரணமா?

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கனிமவளத் துறை அலுவலகத்திலும் சோதனை நடப்பதாகத் தெரியவந்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலச மஹாலில் செயல்படும் கனிமவளத் துறை அலுவலகத்தில் நான்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு கனிமவளத் துறை அதிகாரிகளிடமும், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளையும் சோதனை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com