தமிழ் நாடு
பி.இ. சேர்க்கை- முதல் சுற்று காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பி.இ. சேர்க்கைக்கான முதல் சுற்று காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளின் இளநிலை பொறியியல் பட்டச் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுக்குப் பின்னர் இருக்கும் காலி இடங்களின் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகள், சென்னை எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் முதல் சுற்றிலேயே நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.