ரயில் கழிவறையில் பொறியாளருக்கு பாலியல் கொடுமை… குற்றவாளியின் படம் வெளியீடு!
கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பெண் பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படத்தை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பெண் பொறியாளர் ஒருவர் கடந்த 26ஆம் தேதி கேரளாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் அந்த பெண் பொறியாளரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்காக ஓடிய அந்த பொறியாளரை அவர்கள் கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் ரயிலிலிருந்து குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் நிலைகுலைந்த அந்த பெண் ரயில் சென்டரல் ரயில் நிலையம் வந்ததும், காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
அளித்த புகாரின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தன.
இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவரி புகைப்படத்தை வெளியிட்டு, அவரைப் பற்றி தெரிந்தால் 9962500599, 9498101950, 9498136719, 9444115461 9443007015 என்ற எண்ணிக்கிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.