பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு... ஜூலை 13 முதல் கலந்தாய்வு!

Engineering rank list released
பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு
Published on

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைகள் நடைபெறும்.

ஜூலை 13 முதல் கலந்தாய்வு தொடங்குகிறது என்றும், ஜூலை 20 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

"தரவரிசைப் பட்டியலில் 53 மாணவர்கள் 200/200 கட் ஆப் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டை குறிப்பிடத் தவறியிருந்தால் 06.07.2026க்குள் அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க அரசு ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அரசு கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 32,843 மாணவர்களும், மின்னஞ்சல் மூலம் 10,175 மாணவர்களும், நேரில் 1,497 மாணவர்களும் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களது வரிசை இடத்தைப் பார்த்துக்கொள்ளலாம்." என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com