என் வீட்டில் 3 மணிநேரம் விஜய் காத்திருந்தார் - எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on: 

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

வரும் 6ஆம் தேதி அன்று இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

"முன்னர் ஒரு முறை அவருடைய படம் ரீலிஸில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு... அனைத்து அதிகாரிகளும் விடுமுறையில் இருந்தனர்.

இருப்பினும், அவர் என்ன கட்சி, யாருடைய தொண்டர் என்ற எதையுமே பார்க்காமல், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய அனுமதி வாங்கி படத்தை திங்கட்கிழமை ரீலிஸ் செய்ய உதவி புரிந்தேன்.

அதற்காக என் வீட்டில் 3 மணி நேரம் விஜய் காத்திருந்தார். அதற்கான நன்றியுணர்வு கூட இல்லாமல், இன்று 'மற்றும் பலர்' என்கிறார்.

அவரின் முகத்திரையை இப்போது மக்கள் தெரிந்துகொண்டார்கள். திரையில் நடித்த விஜய், நேரிலும் நடித்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

இனி ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாக விஜய் சென்று ஓட்டு கேட்டாலும், மக்கள் ஓட்டுப்போடத் தயாராக இல்லை." என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com