இபிஎஸ் பதில் பழைய செய்தி! - ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்
Published on

அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறித்த கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீசெல்வம் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை துரோகி என மேடைக்கு மேடை சொல்லி வந்த டிடிவி தினகரன் திடீரென அதிமுக கூட்டணிக்கு சென்றார். இதனால், அவருடன் நல்லுறவில் இருந்த ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் எதிர்பார்ப்பு நிலைவியது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ”அதிமுகவில் இணைய ரெடி... டிடிவி தினகரனும், அவரது அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் தயாரா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி ஓபிஎஸ்சை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அவரை சேர்த்து கொள்ள வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ”அதெல்லாம் பழைய செய்தி.” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com