மாவட்டச் செயலாளர்களைத் திரட்டிக் காட்டிய எடப்பாடி!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Published on

இரு பிரிவுகளாக மோதிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தன்னுடைய பலத்தைக் காட்டினார். 

அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, அக்கட்சியில் இரண்டு பிரிவுகளாக நிர்வாகிகள் பிரிந்து நிற்கின்றனர். இருபத்துக்கும் மேற்பட்ட மாவட்டச்செயலாளர்களின் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

கோஷ்டி இடைவெளி அதிகமாகிக்கொண்டே போன நிலையில், சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று மாவட்ட்ச் செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி கூட்டினார். மொத்தம் 82 கட்சியமைப்பு மா.செ.கள் உள்ளநிலையில், 22 பேர்தான் இதில் கலந்துகொண்டனர் என்று தகவல்கள் வெளியாகின.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.இரமணா, 80 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com