பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அ.தி.மு.க.- பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பிறகு நாளை முதல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். 

நாளை மாலையில் சென்னை, மயிலாப்பூரிலும்,

வரும் 27ஆம் தேதி மாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரிலும், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலும்,

அடுத்து 28 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை ஆர்.கே.நகரிலும், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரிலும் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

29இல் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலும், நெல்லை மாவட்டம் இராதாபுரத்திலும்,

30ஆம் தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும்,

31ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும்,

ஏப்ரல் முதல் நாளன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரங்களிலும் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com