மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்கம் கூடாது என்பதற்காக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு இதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்பதை மையமாக வைத்து கருத்துகளை முன்வைத்தார்.
அப்போது அமைச்சர் துரைமுருகனும் முதலமைச்சர் ஸ்டாலினும் பதிலும் விளக்கமும் அளித்தார்கள்.
ஒரு கட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், “ எதிர்க்கட்சித் தலைவரைப் போல நானும் உரக்கப் பேசுவேன்.” எனக் கூறி, சத்தமாக தன் கருத்துகளை எடுத்துவைத்தார்.
அதைக் கேட்டு கடுப்பான எடப்பாடி பழனிசாமி, “ஒன்றும் பேசமுடியாவிட்டால் இப்படித்தான் பேசமுடியும். சரக்கு இருந்தால்தானே பேசமுடியும். இது சட்டமன்றம். மக்கள் பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். ஒரு மூத்த உறுப்பினர், மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி ஆ ஊன்னா என்ன... மக்களுடைய பிரச்னை... இந்த வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது.” என்று ஆவேசமாகப் பேசினார்.