டென்ஷன் ஆக்கிய எடப்பாடி... சீட்டைவிட்டு எழுந்த சபாநாயகர்!

சட்டப்பேரவை
சட்டப்பேரவை
Published on

சட்டப்பேரவையில் இன்று காலையிலேயே காரசாரம் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட அம்மோனியா கசிவு உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவகள் பேச முயன்றனர். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரிப் பிரச்னை குறித்தும் பேச முற்பட்டார். 

அப்போது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் 110ஆவது விதியின்படி அறிக்கை அளிக்க பேரவைத்தலைவர் அழைப்பு விடுத்தார். அப்போதும் பழனிசாமி பேச முயன்றார். 

அமைச்சர் பேசத் தொடங்கிய நிலையில் மீண்டும் குறுக்கீடு தொடரவே, எடப்பாடி பழனிசாமியை உட்காரச் சொல்லிவிட்டு அமைச்சரைப் பேசுமாறு அவைத்தலைவர் பிரபாகர் கேட்டுக்கொண்டார். 

அதையுமீறி பழனிசாமி விடாப்பிடியாக பேசிக்கொண்டே, விதிப்படி நடந்துகொள்ளுங்கள் என்று கூறியதால், கடுப்பான பிரபாகர், இருக்கையைவிட்டு எழுந்து சீற்றத்துடன் பதில்கூறினார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com