சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை நீக்கிய எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on: 

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

அண்மை காலமாக, அ.தி.மு.க.வில் மாவட்ட ரீதியிலான அமைப்புகளின் மறுசீரமைப்பு, புதிய நிர்வாகிகள் நியமனப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கிய அ.தி.மு.க. ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், கட்சியின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்த சி.வி.சண்முகத்தின் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com