சர்ச்சை ஆன பேச்சு- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
Published on

முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. அதற்கு இன்று விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று பிரச்சாரம் செய்த பழனிசாமி, மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பேசினார். அப்போது, “தி.மு.க. ஆட்சியில் வறட்சி வந்ததா, வெள்ளம் வந்ததா, புயல் வந்ததா, கொரோனா வந்ததா... அப்படி வந்திருந்தால் முதலமைச்சர் காணாமல் போயிருப்பார். அவரும் கொரோனாவிலேயே போயிருப்பார்...” என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று திருவல்லிக்கேணியில் பிரச்சாரம் செய்த பழனிசாமி, நேற்று பேசியதற்கு விளக்கம் அளித்தார். கொரோனா காலத்தில் ஓடிப்போய் போட்டோ ஷூட் எடுக்கிற ஸ்டாலின், காணாமல் போனார் என்றே தான் கூறியதாகவும் ஆனால் தன்னைப் பற்றி தவறாகப் பேசுவதாக ஸ்டாலின் சொல்வதாகவும் பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

அவரின் இந்த சமாதானம் எடுபடுமா என்றுதான் தெரியவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com