சம வேலைக்கு சம ஊதியம்…3வது நாளாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம்…3வது நாளாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது!
Published on

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவுமூப்பு ஆரியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி துறை அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டாம் நடத்தி, கைதாகினர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று, எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர். அவர்களை காவல் துறை கைது செய்தது.

மூன்றாவது நாளான இன்று, ஆசியர்கள் எங்கு போராட்டம் நடத்துவார்கள் என்று தெரியாததால் டிபிஐ வளாகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள், சென்னை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசியர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கூறிய நிலையில், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீப நாள்களாகவே தலைநகரான சென்னையில், தூய்மைப்பணியார்கள், செவிலியர்களை தொடர்ந்து ஆசியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com