ஜூலை 31 முதல் ஈரோடு புத்தகத் திருவிழா... அரங்கு 143-ல் அந்திமழை!

Erode book exhibition
ஈரோடு புத்தகத் திருவிழா
Published on

தமிழக அரசும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய அரசு கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 வரை இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதில் 230-க்கும் மேற்பட்ட தரம்மிக்க தமிழ், ஆங்கிலப் புத்தக அரங்குகள் அமையவுள்ளன.

அயலகத் தமிழர்களின் படைப்புகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

தினமும் புதிய புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுகள், வெளிநாட்டுத் தமிழ் ஆளுமைகளின் உரைகள் இடம்பெறவுள்ளன.

தாங்கள் படித்த, தங்களுக்குப் பிடித்த பள்ளிகளுக்கு வழங்கும் நூலக அலமாரித் திட்டத்தைத் தொடங்க உள்ளார்கள்.

மேலும், 40 வயதிற்கு உட்பட்ட சிறந்த அறிவியலாளர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன், 'அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது' வழங்கப்படும்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் நம் அந்திமழையும் இடம்பெற்றுள்ளது.

அரங்கில் கடை எண்.143-ல் நம் அந்திமழையின் படைப்புகள் காட்சி, விற்பனைக்கு வைக்கப்படும்.

அந்திமழை வாசகர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com