இந்துத்துவ பாசிசம்: வேர்களும் விழுதுகளும்
இந்துத்துவ பாசிசம்: வேர்களும் விழுதுகளும்

ஈரோடு காவல்துறையின் நடவடிக்கைக்கு தபெதிக கண்டனம்!

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் “இந்துத்துவ பாசிசம்: வேர்களும் விழுதுகளும்" என்ற புத்தகத்தை விற்பனை செய்யக் கூடாது என காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், அதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் அவர்கள் எழுதிய "இந்துத்துவ பாசிசம்: வேர்களும் விழுதுகளும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூல்களை ஈரோடு புத்தக கண்காட்சியில் எதிர் வெளியீடு அரங்கில் வைத்துள்ளார்கள்.

அந்த நூல்களை விற்பனை செய்யக் கூடாது, விளம்பர சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்று அரங்குக்குள் நுழைந்து ஈரோடு காவல்துறையினர் மிரட்டி இருக்கின்றார்கள்.

அதே போல திராவிடர் கழகத்தின் வெளியீடான மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் நூலையும் விற்பனை செய்யக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த நூல்கள் தடை செய்யப்பட்ட நூல்களா? தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பல புத்தக கண்காட்சிகளில் தெருக்களில் விற்பனை செய்து கொண்டிருக்கின்ற இந்த நூல்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஈரோடு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்?

ஈரோடு காவல்துறை யாருக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது?

காவல்துறையின் இச்செயலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com