பெரியார் பேரணிக்கு மறுப்பா?- ஈரோடு போலீஸ் மறுப்பு

ஈரோடு மாவட்ட காவல்துறை
ஈரோடு மாவட்ட காவல்துறை
Published on

ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் நினைவுப் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அதைப் பற்றிய தகவல்கள் வெளியாகின. 

ஆனால், அனுமதி மறுக்கப்படவில்லை என ஈரோடு மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ”வரும் 17ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் ஊர்வலமாகச் சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகர காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர். மேற்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான செய்தி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல்துறை
ஈரோடு மாவட்ட காவல்துறை
logo
Andhimazhai
www.andhimazhai.com