
“அதிமுக முழு மெஜாரிட்டி பெற்றாலும் கூட பாஜகவுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதாக.” மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
தனியார் ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிகையார் ப்ரியன், ”அதிமுக தலைமையிலான ஆட்சி என்பதை விட என்டிஏ கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்கிறார்கள். இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும், பாஜகவுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்தே ஆக வேண்டும். இனி பாஜக ஆந்திர மாடலை தான் பின்பற்றப்போகிறது.
ஒருவேளை கொடுக்கவில்லை என்றால், நிதி ஒதுக்குவதில் கை வைத்துவிடுவார்கள். பிறகு எப்படி எடப்படியால் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
இது என்.டி.ஏ. கூட்டணி என்று சொல்லிதான் டிடிவி தினகரனை சம்மதிக்க வைத்துள்ளது பாஜக. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அமைச்சரவையில் இருப்போம் என பாஜகவினர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் டிடிவி தினகரன் கூட்டணிக்கு சென்றிருக்கிறார்.” என்றார்.