வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

“எல்லாம் முடிஞ்சு போச்சு:" கூட்டணி குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!

அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான கேள்விக்கு “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தொகுதி பிரச்சினைகளுக்காகத்தான் நிதியமைச்சரை  சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாகக் கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.” என்றார்.

கூட்டணி குறித்து கேள்விக்குப் பதிலளித்தவர்,”கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்றார்.

அதிமுக கூட்டணி குறித்து வி.பி. துரைசாமி பேசியது தொடர்பான கேள்விக்கு, “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று பதிலளித்தவாறே சென்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com