ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்
Published on

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மியாட் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேரு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். உடன் அமைச்சர்கள் சென்றிருந்தனர்.

முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ’அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ராவை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார். என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com