அன்பில் மகேஸ் இடங்களில் ரெய்டு - மு.க.ஸ்டாலின் கருத்து

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on

அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

" * தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்,

* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்,

* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்,

* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு,

* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது த.வெ.க. அரசு.

இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது.

பொய்யான குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்." என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com