
“கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல.. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஓர் அங்கம்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
மத்திய – மாநில உறவுகள் குறித்து தேசிய அளவில் உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கார்நாடக முதலமைச்சர் சித்தராமைய கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித த்தில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல – அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசியம் குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையச் சீல்குலைத்ததுள்ளது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்தியாவின் வலிமையே அதன் கூட்டுறவு கூட்டாசி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் உள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் போன்ற ஒரு வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது.” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவையும், கூட்டாட்சி தத்துவத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தையும் நான் பெரிதும் மதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.