முதல் முறையாக துணை மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணம் அறிவிப்பு!

fees for paramedical course
துணைமருத்துவ படிப்புகளுக்கான கட்டணம்
Published on

தமிழகத்தில் இயங்கும் தனியார் கல்லூரிகள், துணைமருத்துவப் படிப்புகளுக்காக மாணவர்களிடம் வாங்க வேண்டிய கல்விக் கட்டணத்தை முதல் முறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் டிப்ளமோ சுகாதார ஆய்வாளர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ. 35,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 70,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ நர்சிங் பொதுப் பாடத்திற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ. 35,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 75,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்பிற்கான கட்டணம் அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ. 30,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ பார்மசி படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ. 25,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 50,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.சி. நர்சிங், போஸ்ட் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு கட்டணமாக ரூ. 60,000, நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணமாக ரூ. 1.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.பார்ம் லேட்டரல் என்டரி படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ. 50,000, நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூ. 1 லட்சம் என்றும் இளநிலை அலைடு ஹெல்த் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ. 50,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 1 லட்சம் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணங்கள் 3 ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு அதிகமாக பணம் வசூலிக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com