பிரபல யூட்டியூபரும் த.வெ.க. தேசிய ஊடகப் பேச்சாளருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய பெலிக்ஸ், தமிழில் முன்னோடியாக யூட்டியூபில் சமகால நடப்புகள் தொடர்பான அலசல்களை வழங்கி அதன்மூலம் புகழ் பெற்றார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு, தில்லிக்குச் சென்றிருந்தபோது கைதுசெய்யப்பட்டு தொடர்வண்டியில் கூட்டிவரப்பட்டார்.
அவருடைய வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தேர்தல் நெருக்கத்தில் அவர் த.வெ.க.வில் இணைந்தார்.
விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு, அதன் தேசிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெலிக்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு, கடந்த 5ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.