தாக்கப்பட்டார் பெண் டி.எஸ்.பி. ... என்னதான் நடந்தது?

female dsp attacked
தள்ளுமுள்ளு... பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்
Published on: 

காவல்துறையில் பணியாற்றும் பெண் உதவிக் கண்காணிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது. 

சம்பவம் நிகழ்ந்தது, அருப்புக்கோட்டையில்! இராமநாதபுரத்தைச் சேர்ந்த காளிக்குமார் என்பவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வாகனத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரின் உறவினர்கள் இன்று அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

அவர்களைக் கலையச் செய்யும் முயற்சியில் சில காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். அப்போது, போராட்டக்காரர்களில் ஒரு இளைஞர் பதிலுக்கு காவல்துறையினர் மீது கைவைக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதில், உதவி கண்காணிப்பாளர் காயத்ரியின் கொண்டையைப் பிடித்து இழுத்து ஒரு நபர் தாக்கியது சூழலை பரபரப்பாக்கிவிட்டது. அதையடுத்து அங்கு காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்தக் காட்சி நேரலையாக ஒளிபரப்பாகவும் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவம் தொடர்பாக பாலமுருகன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்று பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com